2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

யாழில் பொலிஸாருக்கு பதிலாக விசேட அதிரடிப்படையினர்

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 25 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-    சொர்ணகுமார் சொரூபன்

யாழ்ப்பாணத்தில் கடந்த 21ஆம் திகதி, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின்னர் பொலிஸார் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, கடந்த இரண்டு நாட்;களாக விசேட அதிரடிப் படையினர் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர்.

வழமையாக ஹர்த்தால் உள்ளிட்ட சம்பவங்களின் போது, பொலிஸார் பூரண பாதுகாப்பை வழங்குவார்கள். ஆனால், இன்று ஹர்த்தால் நடைபெறும் போது பொலிஸார் எவ்விதப் பாதுகாப்பையும் வழங்கவில்லை.

கடந்த 21ஆம் திகதி அதிகாலை, கொக்குவில், குளப்பிட்டிப் பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களான கலைப்பீடத்தில் 3ஆம் வருடத்தில் கல்வி கற்கும் கிளிநொச்சியைச் சேர்ந்த நடராசா கஜன் (வயது 23), சுன்னாகத்தைச் சேர்ந்த பவுண்ராஜ் சுலக்ஸன் (வயது 24) ஆகிய மாணவர்கள் உயிரிழந்தனர்.

இதனையடுத்தே, பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் இருந்து விலகியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X