Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Gavitha / 2015 நவம்பர் 03 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.குகன்
யாழ்ப்பாண மாவட்டத்தில் மீண்டும் டெங்கு நோய் பரவும் வாய்ப்புக்கள் அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ள யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ்.நந்தகுமார், டெங்கு நுளம்பு பெருக்கத்தினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அனைவரும் ஒத்துழைக்குமாறு கோரியுள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 'யாழ்;. மாவட்டத்தில் கடந்த வருடத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. இருப்பினும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இவ்வதிகரிப்பு மழை காலங்களில் ஏற்படும் வழமையான அதிகரிப்பு என்பது இனங்காணப்பட்டுள்ளது.
இவ்வருடம் ஜனவரி மாதத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் 529 பேர் டெங்கு நோய் தாக்கம் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 429 பேருக்கு டெங்கு நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் பின்னரான காலப்பகுதியில், டெங்கு நோயின் தாக்கம் படிப்படியாக குறைவடைந்து சென்றது. குறிப்பாக கடந்த ஏப்ரல் மாதத்தில் டெங்கு நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது.
குறிப்பாக கடந்த செப்டெம்பர் மாதம் 1ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி வரைக்கும் 59 பேர் வரையிலே டெங்கு நோய் தாக்கத்துக்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர்.
இருப்பினும், யாழ்ப்பாணத்தில் தற்போது பருவமழை பெய்து வருகின்ற நிலையில் மீண்டும் டெங்கு நோய் பரவும் வாய்ப்புக்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன.
மழை வெள்ளம் தேங்கி நிற்கும் பகுதிகளில் உள்ளவர்கள் நுளம்புப் பெருக்கத்துக்கு ஏதுவாக தமது சுற்றுப் புறங்களை வைத்திருப்பதை தவிர்த்துக் கொள்ளவேண்டும்' என்று அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago