2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

யாழில் மீள்குடியேறிய முஸ்லிம்களுக்கு மேலதிக காணிகள் வேண்டும்

Niroshini   / 2016 பெப்ரவரி 02 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்

யாழ்ப்பாணத்தில் மீளக்குடியமர்ந்துள்ள முஸ்லிம்களுக்கு இருக்கின்ற காணிகள் போதாதுள்ளதாகவும் தங்களுக்கு மேலதிக காணிகள் வழங்கப்பட வேண்டும் எனவும் அப்பகுதி முஸ்லிம் பிரதிநிதிகள் கோரிக்கைவிடுக்கின்றனர்.

யாழ்ப்பாணப் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் இணைத்தலைமையின் கீழ், பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில், திங்கட்கிழமை (01) நடைபெற்றது. இதன்போதே, முஸ்லிம் பிரதிநிதிகள் இந்தக் கோரிக்கையை முன்வைத்தனர்.

1990ஆம் ஆண்டுக்கு முன்னர் தாங்கள் விட்டுச் சென்ற காணிகளில் முஸ்லிம் மக்கள், மீளக்குடியேறி வருகின்றனர். இருந்தும் மீளக்குடியேறுபவர்களுக்கு காணிகள் போதாதுள்ளது. இதனால், தங்களுக்கு மேலதிக காணிகள் தரப்படவேண்டும் என பிரதிநிதிகள் கோரினர்.

இதன்போது, நீங்கள் தற்போது, இருக்கும் காணிகளின் உறுதிப்பத்திரங்கள் மற்றும் நீங்கள் மேலதிகமாக கோரும் காணிகள் அடையாளப்படுத்தியிருந்தால் அவற்றை எமக்குத் தெரிவித்தால் நடவடிக்கை எடுப்பதாக இணைத்தலைமைகள் தெரிவித்தனர்.

மேலும், பொம்மைவெளிக்கு அருகிலுள்ள வயல் காணிகளை தங்களுக்கு தருமாறு அந்தப் பிரதிநிதிகள் கூறியதையடுத்து, அந்தக் காணிகளின் உரிமை மற்றும் நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாக இணைத்தலைமைகள் கூறினர்.

இதேவேளை, முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில், தனியாக ஒருநாள் கதைக்க வேண்டும் எனவும் பிரதிநிதிகள் கோரிக்கை முன்வைத்தனர்.

யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட கொட்டடி, நாவாந்துறை மற்றும் பொம்மைவெளிப் பகுதியில் முஸ்லிம் மக்கள் பெருமளவு வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X