Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2016 ஏப்ரல் 06 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். மாவட்ட மீள்குடியேற்றம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று மாவட்ட செயலகத்தில் யாழ். மாவட்ட செயலாளர் நாகலிங்கன் வேதநாயகன் தலைமையில் புதன்கிழமை ()5) இடம்பெற்றது.
இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலர் கருத்துக் கூறுகையில்,
மீள்குடியேற்ற அமைச்சினால் ஒதுக்கப்பட்டுள்ள விசேட நிதியின் மூலம் பல்வேறு செயற்றிட்டங்கள் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது. தலா 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான 3000 வீடுகள் அமைச்சால் அமைத்துக்கொடுக்கப்படவுள்ளது. 3000 பயனாளிகளுக்கு தலா 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கப்படவுள்ளன. 1200 பயனாளிகளுக்கு தலா 55 ஆயிரம் ரூபாய் பெறுமதியான மலசலகூடங்கள் அமைத்துக்கொடுக்கப்படவுள்ளன.
மீள்குடியேறிய மக்களுக்கு 100 மில்லியன் ரூபாய் செலவில் குடிநீர்க் கிணறுகள் அமைக்கப்பட்டு, நீர் வழங்கல் முறைகள் போன்றவற்றை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. மீள்குடியேற்றப்பட்ட பிரதேசங்களில் காணப்படும் வீதிகள் 100 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைப்புச் செய்யப்படவுள்ளது.
இவற்றுக்கான பயனாளிகளை தெரிவு செய்யும் நடவடிக்கை பிரதேச செயலாளர்களினூடாக நடைபெறுகின்றன. விரைவில் இந்தச் செயற்றிட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளது என்றார்.
21 minute ago
2 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
2 hours ago
7 hours ago
9 hours ago