2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

யாழில் விசேட அதிரடிப் படையினர் ரோந்து

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 05 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

- குணசேகரன் சுரேன்

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் இரவு நேரங்களில் விசேட அதிரடிப் படையினரின் ரோந்து நடவடிக்கைகள் கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

சுமார் 10 எண்ணிக்கையைக் கொண்ட இந்த விசேட அதிரடிப் படையினர், நகரப் பகுதிகளின் வீதிகளில் ரோந்து செய்து வருகின்றனர்.

கடந்த நவம்பர் மாதம் 27ஆம் திகதி, யாழ்ப்பாணத்தில் மாவீரர்தினம் அனுஸ்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த வீதி ரோந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மாலை 5 மணியளவில் மேற்கொள்ளப்படும் இந்த ரோந்து, இரவு 9 மணியையும் தாண்டி செய்யப்பட்டு வருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X