2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

யாழில் வெற்றிலைக்குத் தட்டுப்பாடு

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 18 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக வெற்றிலைக்குத் தட்டுப்பாடு நிலவுகின்றது. ஒரு வெற்றிலை 04 ரூபாய் தொடக்கம் 06 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது. 

யாழ்ப்பாணத்தில் நிலவும் கடும் வரட்சி காரணமாக வெற்றிலை உற்பத்தி குறைவடைந்த நிலையில், சித்திரைப் புத்தாண்டு கைவிசேடம் கொடுப்பதற்காக வெற்றிலையின் கேள்வி அதிகரித்திருந்தது. 

இதனால் வெற்றிலைக்குத் தட்டுப்பாடு நிலவி வெற்றிலையின் விலையானது அதிகரித்துள்ளது. 

வெற்றிலைச் சீவல் 10 ரூபாய் பாசலில் முன்னர் 2 வெற்றிலைகள் வைக்கப்பட்ட நிலையில் தற்போது ஒரு வெற்றிலை மாத்திரம் வைக்கப்படுகின்றது. 

05 வெற்றிலைகளுக்கு மேல் வைத்து விற்பனை செய்யப்படும் 20 ரூபாய் பாசலில் தற்போது 3 வெற்றிலைகள் மாத்திரம் வைத்து விற்பனை செய்யப்படுகின்றன. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X