Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Gavitha / 2015 செப்டெம்பர் 03 , மு.ப. 06:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
குணசேகரன் சுரேன்
யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள சந்தைகளில் வாழைப்பழத்தின் விலை, கடந்த சில நாட்களாக அதிகரித்த நிலையில் காணப்படுகின்றன.
கதலிப் பழம் கிலோகிராம் 100 ரூபாய் தொடக்கம் 130 ரூபாய் வரையிலும், இதரை 1 கிலோகிராம் 70 ரூபாய் முதல் 80 ரூபாய் வரையிலும், கப்பல் 1 கிலோகிராம் 140 ரூபாய் முதல் 150 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றன.
வாழைப்பழச் சந்தைகளில் முக்கியத்துவம் வாய்ந்த மருதனார்மடம், திருநெல்வேலி, சங்கானை ஆகிய சந்தைகளில் இவ்வாறு வாழைப்பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
யாழ். மாவட்டத்திலுள்ள ஆலயங்களில் திருவிழாக்கள் நடைபெறுகின்றமையும், திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகள் இம்மாதத்தில் அதிகம் இடம்பெறுவதாலும் கதலி வாழைப்பழத்தின் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
திருமண நிகழ்வில் வாசலில் கட்டப்படும் கதலி வாழையுடன் கூடிய குலையானது ஒரு ஜோடி 5,000 ரூபாய் முதல் 7,000 ரூபாய் விலை போவதாக வாழைத் தோட்ட உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
விலை அதிகரித்தமையால் அதிகளவானவர்கள் கதலி வாழைப்பழ உற்பத்தியில் அதிக நாட்டம் காட்டுகின்றமையால், இதரை உற்பத்தி குறைவடைந்து அதனுடைய விலையும் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
12 minute ago
58 minute ago
2 hours ago