2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

யாழ். வைத்தியசாலைக்கு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

Menaka Mookandi   / 2016 டிசெம்பர் 02 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

இலங்கை கடற்படையினரால் யாழ்.போதனா வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் எஸ்.சத்தியமூர்த்தி விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக இலங்கை கடற்படையினரால் யாழ்.போதனா வைத்தியசாலையில் அமைக்கப்பட்டது. 

இதனை வடமாகாண கடற்படை தளபதி றியல் அட்மிரல் பியல் டி சில்வா வியாழக்கிழமை (01) திறந்து வைக்கப்பட்டது.

சுத்தமான குடிநீரை அனைவரும் பெற்றுக் கொள்ளும் நோக்கில் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் முதற்கட்டம் யாழ்.பல்கலைக்கழகத்தில் ஐனாதிபதியால் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இக்குடிநீர் திட்ட இரண்டாம் கட்டம் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. 

ஐம்பது இலட்சம் பெறுமதியான இத்திட்டத்தை கடற்படையினர் 15 இலட்சம் ரூபா பெறுமதியில் அமைத்துள்ளதுடன் நாட்டிலுள்ள அனைத்து கடற்படையினரும் தமது ஒரு நாள் வேதனத்தை இத்திட்டத்திற்கு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X