2024 ஜூன் 17, திங்கட்கிழமை

யாழில் மோதலை தடுக்கச் சென்ற இளைஞன் உயிரிழப்பு - மச்சான் கைது

Freelancer   / 2024 மே 25 , பி.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

யாழ்ப்பாணம் - தாவடி பகுதியில் தனது தந்தைக்கும் மச்சானுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலை தடுக்கச் சென்ற, 23 வயதுடைய வரதராசா நியூட்சன் எனும் இளைஞன் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். 

கடந்த 2ஆம் திகதி இளைஞனின் தந்தைக்கும் , இளைஞனின் அக்காவின் கணவருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டு, கைக்கலப்பாக மாறியுள்ளது. 

அதனை அவதானித்த இளைஞன் இருவருக்கும் இடையிலான மோதலை தடுக்க முற்பட்ட வேளை அக்காவின் கணவரின் கத்திகுத்துக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளனர். 

படுகாயமடைந்த இளைஞனை அங்கிருந்து மீட்டு , சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த சுன்னாகம் பொலிஸார் கத்திக்குத்து தாக்குதல் மேற்கொண்டவரை கைது செய்து மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை , சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X