2025 மே 03, சனிக்கிழமை

யாழில் 1,144 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்

Shanmugan Murugavel   / 2020 டிசெம்பர் 14 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம். றொசாந்த் 

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மருதனார்மட சந்தை கொவிட்-19 பரவலால் 400 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என மாவட்டச் செயலாளர் க. மகேசன் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மகேசன் அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், 

“யாழ்ப்பாணத்தில் இவ்வாண்டு ஒக்டோபர் நான்காம் திகதிக்குப் பின்னர் 59 கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 31 பேர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 18 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மருதனார்மட சந்தை கொவிட்-19 பரவலையடுத்து மேலும் 400 குடும்பங்கள் கடந்த மூன்று நாள்களில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் 1,144 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

அதேவேளை மருதனார் மட சந்தை மற்றும் அதனை சூழவுள்ள வியாபார நிலையங்கள் என்பன மறுஅறிவித்தல் வரை மூட உத்தரவிட்டுள்ளதாக” கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X