Freelancer / 2022 மார்ச் 30 , மு.ப. 08:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதர்சன் வினோத்
யாழ். உரும்பிராய் - யோகபுரம் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள், பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
நீதிமன்றினால் பிடிவிறாந்தை நடைமுறைப்படுத்த சென்றபோது இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யோகபுரம் பகுதியை சேர்ந்த இருவருக்கு நீதிமன்ற வழக்கு விசாரணைகளுக்கு செல்லத் தவறியமையால் நீதிமன்றினால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த சென்ற கோப்பாய் பொலிஸ் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இருவரையும் கைது செய்ய முயன்ற போது,
அங்கு நின்ற கும்பல் ஒன்று இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்ததுடன், அவர்கள் மீதும் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். (R)
58 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
1 hours ago
2 hours ago