Freelancer / 2023 நவம்பர் 08 , பி.ப. 12:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.நிதர்ஷன்
யாழ்.நகர் பகுதியில் அமைந்துள்ள ரில்கோ ஹோட்டலில் கடந்த 4ஆம் திகதி இரவு "DJ night" எனும் பெயரில் போதை விருந்து கொண்டாட்டம் ஒன்று இடம்பெற்ற விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விருந்துக்கு கொழும்பை சேர்ந்த Eventsby ShuttleVibe எனும் நிறுவனத்தின் பெயரில் சிலர் , சமூக வலைத்தளங்களின் ஊடாக அழைப்பு விடுத்துள்ளாதாக தெரியவந்துள்ளது.
அதன் அடிப்படையில் அன்றைய தினம் அங்கு வந்த சிலர் தாம் கொண்டு வந்திருந்த கஞ்சா , ஐஸ் போன்ற போதை பொருளையும் நுகர தொடங்கியுள்ளனர்.
ஹோட்டலில் மதுபானம் மாத்திரமே வழங்க பட்டதாகவும், ஆனாலும் அங்கு வந்த பலரும் தம் வசம் உயிர்கொல்லி போதைப்பொருளை வைத்திருந்ததாக விருந்தில் கலந்து கொண்ட சிலர் தெரிவித்தனர்.
இந்நிலையில் தென்பகுதிகளில் சமூக வலைத்தளங்கள் ஊடாக இவ்வாறான போதை விருந்துக்கு அழைப்பு விடுப்பவர்களுக்கு எதிராகவும் , விருந்து கலந்து கொண்டவர்களுக்கு எதிராகவும் பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
55 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
2 hours ago
2 hours ago