2025 மே 05, திங்கட்கிழமை

’யாழுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசிகள் நிறைவடைந்தன’

Niroshini   / 2021 ஜூன் 02 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ். மாவட்ட பொதுமக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட முதலாம் கட்ட 50 ஆயிரம் தடுப்பூசிகள், இன்று மதியத்துடன் நிறைவடைந்துள்ளன என, யாழ் மாவட்டச் செயலாளர்
க. மகேசன் தெரிவித்தார்

அடுத்த கட்ட தடுப்பூசிகள் வார இறுதியில் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றதாகவும் எனவே, ஏற்கெனவே தடுப்பூசி வழங்க தயாராக இருந்த கிராம சேவகர் பிரிவுகளில் நாளைய தினம் (03) தடுப்பூசி வழங்கப்படமாட்டாது எனவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், அந்த பகுதி மக்களுக்கான தடுப்பூசிகள் இரண்டாம் கட்ட தடுப்பூசி வந்தவுடன் குறித்த நிகழ்ச்சி நிரலின் படி தடுப்பூசி வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

எனவே, பொதுமக்கள் இது தொடர்பில் குழப்பமடைய தேவையில்லை எனத் தெரிவித்த அவர், அடுத்தகட்ட ஊசி கிடைத்தவுடன் அந்த நிகழ்ச்சி நிரலின் படி தொடர்ச்சியாக தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படுமென்றும் கூறினார்.

'இன்றைய தினம் யாழ்ப்பாண பல்கலைக்கழக பணியாளர்கள் மற்றும்  15 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி வழங்கப்படும் என எதிர்பார்த்து இருந்த போதிலும் கூடுதலான மக்கள் ஆர்வம் காட்டி தடுப்பூசியை பெற்றதன் காரணமாக, இன்று பகலுடன் தடுப்பூசி நிறைவடைந்துள்ளது' என்றும், அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X