2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

யாழ்.பல்கலை மோதல் : மாணவர்களுக்கு விளக்கமறியல்

Editorial   / 2018 ஜனவரி 23 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-              எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த்

யாழ்.பல்கலைகழக முகாமைத்துவபீட மூன்றாம் வருட பெரும்பான்மையின மாணவர்கள் நால்வரை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.சதீஸ்தரன் நேற்று (22) உத்தரவிட்டார்.

கடந்த வியாழக்கிழமை (18) இரவு முகாமைத்துவபீட 4ஆம் மற்றும் 3ஆம் வருட மாணவர்கள் யாழ்.பல்கலைகழகம் மற்றும் பரமேஸ்வர சந்தி பகுதியில் தமக்குள் மோதிக்கொண்டனர்.

தாக்குதலுக்கு இலக்கான மாணவர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தனர். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் நான்கு பெரும்பான்மையின மாணவர்களை கைது செய்து நேற்று (22) யாழ்.நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தினர்.

அதனை தொடர்ந்து மாணவர்கள் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி, மாணவர்களுக்கு பிணை வழங்க வேண்டும் என விண்ணப்பம் செய்தார்.

பிணை விண்ணப்பத்தை நிராகரித்த நீதிவான், ‘பல்கலைகழக மாணவர்கள் மத்தியில் மோதல்கள் அதிகரித்து வருகின்றன. அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்’ என தெரிவித்து நான்கு மாணவர்களையும் எதிர்வரும் 25ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் தடுத்து வைக்க உத்தரவிட்டார்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X