Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Niroshini / 2021 மே 31 , மு.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சுமார் 1,600 பேருக்கு, கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட உத்தரவை வழங்கியுள்ளார்.
இதற்கமைய, ஜுன் 3, 4ஆம் திகதிகளில், பல்கலைக்கழகப் பணியாளர்களுக்கு சினோபாம் கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக, யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களின் கல்விச் செயற்பாடுகளை வழமைக்குக் கொண்டுவரும் வகையில், பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் சகலருக்கும் கொரோனாத் தடுப்பசிகளை வழங்குமாறு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சுமார் 1,600 பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா விடுத்த கோரிக்கை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கவனத்துக்கு, நேற்று (30) கொண்டுவரப்பட்டது.
இதையடுத்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சுமார் 1,600 பேருக்கு உடனடியாக கொரோனா தடுப்பூசி வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியதையடுத்து, ஜுன் 3, 4ஆம் திகதிகளில் பல்கலைக்கழகப் பணியாளர்களுக்கு சினோபாம் கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.
பல்கலைக்கழகத்தின் அனைத்து பணியாளர்களையும் குறிப்பிட்ட திகதிகளில் வந்து தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறு, யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago