Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
எம். றொசாந்த் / 2019 மார்ச் 13 , மு.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
குற்றம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கினால் அந்த குற்றம் தடுக்கப்படுகிறதோ இல்லையோ, பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நபரை குற்றவாளியே தொலைபேசியில் தொடர்பு கொண்டு எச்சரிக்கை செய்யும் அளவிற்கு யாழ்.பொலிஸாருடைய நம்பகத்தன்மை உள்ளது என ஈ.பி.டி.பி கட்சியின் யாழ்.மாநகர சபை உறுப்பினரும் பிரபல சட்டத்தரணியுமான மு.ரெமிடியஸ் யாழ்.பொலிஸார் தொடர்பில் வெளிப்படையாக குற்றம் சுமத்தியுள்ளார்.
யாழ்.மாநகர சபையின் அமர்வு நேற்று (12) நடைபெற்றது. அமர்வின் போது குற்றங்களை தடுக்க விசேட பொலிஸ் காவலரண் அமைப்பது தொடர்பில் சபையில் பேசப்பட்ட போதே மேற்கண்டவாறு குற்றம் சுமத்தியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்.கரையோரப் பகுதியில் அளவுக்கு அதிகமாக நடைபெறும் மணல் அகழ்வு தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கினால் அத்தகவல் தொடர்பில் பொலிஸார் இரகசியம் பேனுவதும் இல்லை, அக் குற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுப்பதிலும் மந்த நிலையை கடைப்பிடிக்கின்றார்கள்.
குறிப்பாக அண்மையில் யாழ்ப்பாணத்தில் மணல் கடத்தல் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நபர் ஒருவருக்கு அந்த மணல் கடத்தலில் ஈடுபட்டவரே தொலைபேசியில் அழைத்து அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
எனவே பொலிஸாருக்கும் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கும் தொடர்பு உள்ளது என்பது வெளிப்படையாக தெரிகிறது என தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
43 minute ago
17 May 2025