Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 20 , மு.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.நிதர்ஷன்
யாழ் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள் உள்ளிட்ட அனைவரும் கடமை நேரங்களில் ‘சிமாட் போன்’ பாவிப்பது தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி நோயாளிகளைப் பார்வையிட வருகின்றவர்களும் அத் தடையை விதிக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள், அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என அனைவரும் கடமை நேரங்களில் சிமாட் போன் பாவிப்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கியிருக்கின்றேன்.
கடமை நேரங்களில் இந்த தொலைபேசிகளைப் பாவிப்பதால் பலரும் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். அதனாலேயே இதனைத் தவிர்ப்பதுக்காக இந் நடவடிக்கையை மேற்கொண்டிருக்கின்றேன்.
இதேவேளை வைத்தியசாலைக்கு நோயாளிகளைப் பார்வையிட வருகின்றவர்களும் ‘சிமாட் போன்’ பாவிப்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
ஆனால் கடமையின் நிமித்தம் சிமாட் போன் தேவை என்றால் அனுமதி பெற்று அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago