Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2020 டிசெம்பர் 09 , பி.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். றொசாந்த்
யாழ்ப்பாணத்தில் கிணற்று நீரைப் பருகும் போது அவதானமாக இருக்குமாறும், முடிந்தளவு கொதிக்க வைத்து ஆறிய நீரை பருகுமாறும் சுகாதார துறையினர், பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் முதல் பெய்த கடும் மழை காரணமாக, கிணறுகளின் நீர் மட்டம் அதிகரித்துக் காணப்படுகின்றது. அத்துடன், கிணறுகளில் வெள்ள நீரும் கலந்துள்ளமையால் அவற்றைப் பருகுவதால், வயிற்றோட்டம், நெருப்புக் காய்ச்சல் என்பன ஏற்படுவதாகவும் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதனால் கொதித்து ஆறிய நீரைப் பருகுமாறும், கிணறுகளுக்கு குளோரின் இடுமாறும் சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இதேவேளை, மழை வெள்ளம் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்குமாறு, யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சி.யமுனாநந்தா அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், “யாழில் பல இடங்களில் வெள்ளம் தேங்கியுள்ளது. அதனால் பல்வேறு பட்ட நோய்த் தாக்கங்கள் ஏற்படும். பலர் வெள்ளங்களின் ஊடாக நடந்து திரிகின்றனர். இதனால் தோல் புண்கள் ஏற்படலாம். எனவே, அனைவரும் அவதானமாக இருக்க வேண்டும். குறிப்பாக சிறுவர்கள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும்” என்றார்.
22 minute ago
23 minute ago
1 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
23 minute ago
1 hours ago
5 hours ago