Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 05 , பி.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன், செல்வநாயகம் ரவிசாந், எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட வீடுகளில், டெங்கு நுளம்பு பரவுவதற்கான அறிகுறிகள் தென்பட்டாலோ அல்லது வீட்டின் பிரதான நுழைவாயில், சுற்றுச் சூழல் சுத்தமாகக் காணப்படாவிட்டாலோ உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென, யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டெங்கு காய்ச்சல் எச்சரிக்கை தொடர்பில், அவர், இன்று (05) விடுத்துள்ள அறிவிக்கையிலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், மாநகர எல்லைக்குள் வசிக்கும் மக்கள், தங்களது வீட்டுச் சூழலில் நீர் தேங்கி, நுளம்பு பெருகாமல் பார்த்துக் கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெங்கு நுளம்பைக் கட்டுப்படுத்தும் நோக்கில், வீடுகளில் உள்ள நீர் தேங்கும் கொள்கலன்களை அகற்றுவதற்கு மாநகரசபையின் வழமையான வட்டார திண்மக் கழிவகற்றல் நடைமுறையில், விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், இதற்கமைய, பிரதி சனிக்கிழமை தோறும், இக்கொள்கலன் கழிவுகளை வட்டார ரீதியாக அகற்றுவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்..
மேலும் தங்களின் வீட்டின் முன்புறம் பிரதான நுழைவாயில் உட்பட சுற்றுச் சூழலில் உள்ள புல், பூண்டுகளையும் தாங்களே அகற்றி சுத்தப்படுத்தி, டெங்கை கட்டுப்படுத்தும் வகையில் துப்புரவு செய்து கொள்ளுமாறும், அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
30 minute ago
50 minute ago