2025 மே 05, திங்கட்கிழமை

யாழ். மக்களை கண்காணிக்க ’ட்ரோன்’ பறக்கிறது

Niroshini   / 2021 மே 26 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

நாடளாவிய ரீதியில் பயணக் கட்டுப்பாடு அமுலில் உள்ள நிலையில்,  யாழ்ப்பாணக் குடாநாட்டில் பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் முகமாக, பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு கட்டமாக, யாழ்ப்பாணப் பொலிஸாரும் இலங்கை விமானப் படையினரும் இணைந்து ட்ரோன் கமெராவின் உதவியுடன் கண்காணிப்பு நடவடிக்கைளை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் நகர், நல்லூர் கோவில் ஆகிய பகுதிகளில், விமானப்படையின் ட்ரோன்  கமெராக்களில் உதவியுடன், பொது மக்களின் நடமாட்டம் கண்காணிக்கப்படுகின்றது.

இதன்போது, அத்தியாவசிய சேவை தவிர்ந்து பயணிப்பவர்கள், இதன்மூலம் இனங்காணப்பட்டு, பொலிஸாரால் கைது செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கைது நடவடிக்கைக்காக, பொலிஸ் மோட்டார் சைக்கிள் படையணியினர் களத்தில் இறக்கப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்ணான்டோ தலைமையில், பெண் பொலிஸாரையும் உள்ளடக்கிய வகையில், இந்த பொலிஸ் மோட்டார் சைக்கிள் அணி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X