2025 மே 14, புதன்கிழமை

யாழ். மாநகர சபை சுகாதார ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

Editorial   / 2020 ஜனவரி 22 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன், டி.விஜிதா 

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, யாழ்ப்பாணம் மாநகர சபை சுகாதார ஊழியர்களால், இன்று (22) பணிப்புறக்கணிப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. 

மாநகர சபை நுழைவாயிலுக்கு முன்பாக பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள சுகாதாரத் தொழிலாளர்கள், தமது கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட தரப்புகள் நிறைவேற்றாவிட்டால், உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்தனர். 

அத்துடன், நிரந்தர நியமனம் வழங்குமாறு பல தடவைகள் கோரியபோதும், “க.பொ.த சாதாரண தரம் சித்தியடைந்தவர்களுக்கு மாத்திரமே நிரந்தர நியமனம் வழங்குவோம்” என்று, நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதேபோல சுகாதாரத் தொழிலாளர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கவில்லையெனவும, சுகாதாரத் தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டினர்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .