2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

யாழ். மாவட்ட பதிவாளர் நாயகம் திணைக்களம் பூட்டு

Princiya Dixci   / 2020 நவம்பர் 26 , பி.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ராஜ்

யாழ். மாவட்ட பதிவாளர் நாயகம் திணைக்களத்தில் இரு நாட்களுக்கு பொதுமக்களுக்கான சேவை இடம்பெற மாட்டாது என யாழ் மாவட்ட பதிவாளர் நாயகம் க.நடராஜா அறிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் இயங்கும் பதிவாளர் நாயகம் திணைக்கள அலுவலகம், நேற்று (25) இரவு பெய்த கடும் மழையின் காரணமாக நான்கு மாடிகளைக் கொண்ட குறித்த கட்டடத்துக்குள் மழை நீர் உட்புகுந்துள்ளது. 

அலுவலகத்துக்குள் இருந்து வெள்ள நீரை அகற்றும் செயற்பாட்டில் அலுவலக ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதன் காரணமாக எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு பொதுமக்களுக்கான சேவை எதுவும் இடம்பெற மாட்டாது என அவர் அறிவித்துள்ளார்.

இந்த வெள்ள அனர்த்தம் எதிர்பார்க்காத ஒரு விடயம் எனவும் எனினும் உடனடியாக பொறியியலாளர் அழைக்கப்பட்டு, கட்டடத்தில் ஏற்பட்டுள்ள  சேதம் உடனடியாகத் திருத்தி அமைப்படவுள்ளதாவும் அலுவலகத்தில் உள்ள ஆவணங்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை எனவும்  மாவட்ட பதிவாளர் நாயகம் தெரிவித்திருந்தார்.

அதேவேளை, இரு நாட்களுக்கு அத்தியாவசியமான சேவைகளை மாத்திரம் மக்கள் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X