2025 மே 14, புதன்கிழமை

யாழ்ப்பாணத்தில் மீளாய்வுக் கூட்டம்

Editorial   / 2020 பெப்ரவரி 13 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூலோபாய நகரங்கள் அபிவிருத்தி திட்டத்தின் அடிப்படையில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும், முன்னெடுக்கவேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலான மீளாய்வுக் கூட்டமொன்று, ஆளுநர் செயலகத்தில், வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் தலைமையில், நேற்று (12) நடைபெற்றது.

இதன்போது, வீதி மற்றும் போக்குவரத்து மேலாண்மை, நகர்ப்புற மேம்பாடு, கலாசார - பாரம்பரியம், வீதி அபிவிருத்தி, வடிகாலமைப்பு, கழிவு நீரகற்றல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன.

குளங்கள் புனரமைப்பு செய்யப்படும்போது அதனுடன் தொடர்புடைய வடிகாலமைப்பு பற்றியும் அதிக கவனமெடுக்க வேண்டுமென, அதிகாரிகளால் சுட்டிக்காட்டப்பட்டது.

அத்துடன், திட்ட வரைபுகள், முன்மொழிவுகள், செயற்பாட்டு அறிக்கையிடல் போன்றனவும் அதனுடன் தொடர்புள்ள நிறுவனங்களின் தாமதங்களும், உலக வங்கியின் நிதிப் பங்களிப்பைப் பறுவதற்குத் தடையாக இருக்குமென்றும் அதற்கான துரித நடவடிக்கைகளை திணைக்களங்கள் முன்னெடுக்க வேண்டுமெனவும், அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, இதன்போது முன்னெடுக்கப்பட வேண்டிய பல விடயங்கள் தொடர்பில் ஆலோசனை கூறிய ஆளுநர், விரைவுத்தன்மைக்குத் தன்னாலான அனைத்து பங்களிப்புகளையும் செய்வதற்குத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .