2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

யாழ்ப்பாணத்துக்கு நாமல் விஜயம்

Editorial   / 2019 ஜூலை 29 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன், டி.விஜித்தா

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ, யாழ்ப்பாணத்துக்கு, இன்று (29) திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார்.

இதன்போது, யாழ். ஆயர் இல்லத்துக்குச் சென்று, ஆயர் ஐஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையைச் சந்தித்துக் கலந்துரையாடிய நாமல் ராஜபக்‌ஷ எம்.பி, இதனைத் தொடர்ந்து நல்லூர்க் கந்தசுவாமி கோவிலுக்கும் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.

அதன் பின்னர், நல்லூரில் அமைந்துள்ள நல்லை ஆதீனத்துக்குச் சென்று, ஆதீனக் குரு முதல்வர் ஞானதேசிக சோமசுந்தர சிவச்சாரிகள் சுவாமியைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதையடுத்து, யாழ்ப்பாணம் நாகவுகாரைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், நாகவிகாரையின் விகாராதிபதி வண மீகஹ யதுரே ஸ்ரீ விமல தேரரை சந்தித்துக் கலந்துரையாடினார்.

அதன் பின்னர், யாழ்ப்பாணம் மாவட்ட பொதுஜன பெரமுன தலைமை அலுவலகத்தில், பொதுஜன பெரமுன உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியதுடன், விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களையும் வழங்கினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .