2025 மே 16, வெள்ளிக்கிழமை

‘யுத்த காலத்தில் நடந்த சம்பவங்கள் தனிநபர் சம்பந்தப்பட்ட விடயமல்ல’

Editorial   / 2019 ஒக்டோபர் 21 , பி.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் ரவிசாந்

 

கோட்டாபய ராஜபக்‌ஷ பாதுகாப்புச் செயலாளராகவிருந்த யுத்த காலத்தில் நடந்த அனைத்து சம்பவங்களும் தனிநபர் சம்பந்தப்பட்ட விடயமல்லவெனத் தெரிவித்த தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவர் தி. ஸ்ரீதரன் (சுகு தோழர்), அரச இயந்திரத்தாலேயே இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டனவெனவும் கூறினார்.

சர்வதேச மாக்சியக் குழுவின் ஏற்பாட்டில், "ஜனாதிபதித் தேர்தல்-2019" எனும் தலைப்பிலான அரசியல் கலந்துரையாடலொன்று, யாழ்ப்பாணம் - ஆரியகுளம் சந்திக்கு அருகாமையில் அமைந்துள்ள தனியார் கல்வி நிலையத்தில், நேற்று (20) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், இம்முறை ஜனாதிபதித் தேர்தலில், யுத்தத்தை முன்னின்று நடத்திய சரத் பொன்சேகாவைத் தமிழ்ச் சமூகம் ஆதரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

யுத்தக் குற்றச்சாட்டுகள் என்பது தனிநபர்கள் சம்பந்தப்பட்ட விடயமல்லவெனத் தெரிவித்த அவர், மாறான அது நிறுவனம் சம்பந்தப்பட்ட விடயமெனவும் கூறினார்.

தனிநபர்கள் அனைத்து விடயங்களிலும் செல்வாக்குச் செலுத்த முடியுமென தான் கருதவில்லையெனவும், அவர் கூறினார்.

அத்துடன், 1970ஆம் ஆண்டிலிருந்து, இலங்கையில் இராணுவமயமாக்கப்பட்ட அரச இயந்திரம் வளர்ச்சியடைந்து வந்துள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .