2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

ரூ. 37 இலட்சம் பெறுமதியான கஞ்சாவுடன் மூவர் சிக்கினர்

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 15 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

கொழும்புக்கு கடத்த முற்பட்ட 24 கிலோவும் 400 கிராமும் நிறையுடைய கஞ்சா போதைப்பொருள் பொதியுடன், மூன்று சந்தேகநபர்களை, இன்று கைது செய்ததாக, இளவாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எம்.ஆர்.சேனாநாயக்க தெரிவித்தார்.

இளவாலை பொலிஸ் புலணாய்வு அதிகரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மாதகல் - கல்விளை பகுதியில், சிவில் உடையில் காத்திருந்த பொலிஸார், சந்தேகத்துக்கிடமான முறையில் வந்த முச்சக்கரவண்டியினை மறித்து சோதனை மேற்கொண்டனர்.

இதன்போது, முச்சக்கர வண்டியில் இருந்து, கஞ்சா போதைப்பொருள் கடத்தியமை கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு கடத்தப்பட்ட கஞ்சாவின் பெறுமதி 36 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

கைதான சந்தேகநபர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், குறித்த கஞ்சாப் பொதிகளை, கொழுமபுக்கு கடத்த முற்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களில் இருவர், கொழும்பைச் சேர்ந்தவர்கள் என்றும் மற்றயை நபர், திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்தவர் எனவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X