2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

ரூ. 2.1 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்படும் மாதிரி வீட்டை பார்வையிட்டார் சுவாமிநாதன்

Menaka Mookandi   / 2016 மார்ச் 04 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

வடக்கு, கிழக்கில் வீடுகள் இல்லாத 65 ஆயிரம் பேருக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கும் அரசாங்கத்தின் வீட்டுத்திட்டத்தில் கோப்பாய், செல்வபுரத்தில் அமைக்கப்பட்ட மாதிரி வீட்டை மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இன்று வெள்ளிக்கிழமை (04) நேரில் சென்று பார்வையிட்டார். ஒவ்வொரு வீடும் தலா 2.1 மில்லியன் ரூபாய் செலவில் இந்த வீடுகள் அமைக்கப்படுகின்றது.

இவ்வாறான தொகையில் யாழ்ப்பாணத்தில் வீடு அமைக்கும் முறையில் 3 வீடுகள் அமைக்க முடியும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார். கழற்றி பூட்டக்கூடிய இம்மாதிரியான வீடுகள் யாழ்ப்பாணத்துக்கு பொருத்தமில்லையெனவும் அதிகாரிகள் கூறியிருந்தனர்.

இதனையடுத்து, மாதிரியாக இரண்டு வீடுகளை அமைப்பது என்றும், அதனை அதிகாரிகள் பொதுமக்கள் பார்வையிட்டு சம்மதித்தால் மேற்கொண்டு அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்றும் அரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்டு, தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் மல்லாகம் பகுதியிலும், கோப்பாய் பிரதேச செயலகத்தில் செல்வபுரம் ஆகிய இடங்களில் தலா ஒவ்வொரு மாதிரி வீடுகள் அமைக்கப்பட்டன. இவ்வாறு அமைக்கப்பட்ட கோப்பாய் பிரதேச வீடொன்றையே மீள்குடியேற்ற அமைச்சர் பார்வையிட்டார்.

மலசலகூடம் மற்றும் குளியலறையுடன் கூடிய வகையில் அமைக்கப்பட்டன. 2 அறைகள், 1 சமையல் அறை மற்றும் வரவேற்பறை ஆகியவை உள்ளடங்கலாக நிலம் முழுவதும் மாபிள் பொருத்தப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது.

ஒரு வீட்டில், 3 கட்டில்கள் அவைக்குரிய மெத்தைகள், 1 அலுமாரி, வரவேற்பு அறை இருக்கை, 2 கணிணி மேசைகள், 1 மடிக்கணிணி, தொலைக்காட்சி, 2 சுழல் கதிரைகள், இன்ரநெற் வசதி, சமையல் அறை தளபாடங்கள், சமையல் பாத்திரங்கள் ஆகியன இந்த வீடுகளில் உள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X