2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

ரயில் பயணசீட்டை 45 நாட்களுக்கு முன்னரே பதிவு செய்யலாம்

George   / 2016 ஜனவரி 29 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்
 
யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தில், பயணத்திற்குரிய அனுமதிச்சீட்டுக்களை 45 நாட்களுக்கு முன்னரே பதிவு செய்து பெற்றுக்கொள்ள முடியும் என யாழ். பிரதான ரயில் நிலைய அதிபர் ரீ.பிரதீபன், வெள்ளிக்கிழமை (29) தெரிவித்தார்.

முன்பதிவு செய்வதற்குரிய நவீன வசதிகள் தற்போது பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதன் காரணமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

காலை 7 மணியில் இருந்து மாலை 5 மணி வரை பதிவுகளை மேற்கொள்ளமுடியும். அதே போல் இலங்கையின் எந்த பிரதேசத்துக்கும்; ரயில் மூலம் தேவையான அளவு பொதிகளை அனுப்பிக்கொள்ள முடியும். அனுப்பி வைக்கப்படும் பொருட்களின் அளவுக்கு கட்டணம் அறவிடப்படும் எனவும் அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X