2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

ரவிராஜின் 10ஆம் ஆண்டு நினைவு

Niroshini   / 2016 நவம்பர் 11 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

2006 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் 10ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில், வியாழக்கிழமை (10) யாழ். கந்தர்மடம் மணல்தரை வீதியில் உள்ள அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ரவிராஜின் திருவுருவத்துக்கு மலர்மாலை அணிவித்தார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொருளாளர் ஸ்ரீ.கிருஸ்ணகுமார், ஆங்கில ஆசிரிய பயிற்றுவிப்பாளர் கோபாலகிருஸ்ணன், யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் ரவீந்திரன் ஆகியோர் நினைவுச் சுடர்களை ஏற்றினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X