2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

ரூ. 30 மில். பெறுமதியான போதைப் பொருட்கள் மீட்பு

Editorial   / 2018 ஜனவரி 07 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்

வல்வெட்டித்துறை - மயிலியதனை கடற்கரைப் பகுதியில் உள்ள பற்றைக்காட்டினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், சுமார் 30 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள், நேற்று (06) மீட்கப்பட்டன என, கடற்படையினர் தெரிவித்தனர்.

வல்வெட்டித்துறை - ஆதி கோவிலடியைச் சேர்ந்த மீனவர் ஒருவருக்கு, பெருமளவான போதைப்பொருட்கள் கடல் வழியாகக் கொண்டு வரப்பட்டு, அவை கடற்கரையை அண்மித்த பற்றைக்காட்டினுள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன என, கடற்படையினரின் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில், அப்பகுதியில் நேற்று முன்தினம் காலை தேடுதல் நடத்தப்பட்டது.

இதன்போது, மறைத்து வைக்கப்பட்டு இருந்த நிலையில், 88 கிலோகிராம் கேரள கஞ்சா, 4 கிலோகிராம் அபின், 4 கிலோகிராம் ஹசஸ் ஆகிய போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட போதைப் பொருட்களின் பெறுமதி, சுமார் 30 மில்லியன் ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.

போதைபொருட்களைக் கடத்தி வந்த நபர் தொடர்பிலும், அவற்றைக் கொள்வனவு செய்வதற்கு தயாராக இருந்த நபர் தொடர்பிலும் தகவல்கள் கிடைக்கப்பெற்று உள்ளதாகவும், விரைவில் அவர்களைக் கைதுசெய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .