2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

விசேட தேவையுடையோர்: தகவல் திரட்டுக்களின் பகிர்வு

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 17 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-    வி.தபேந்திரன்

வடமாகாண சுகாதார அமைச்சால் கிளிநொச்சி மாவட்டத்தில் விசேட தேவை உடையோர் மற்றும் விசேட வகைக்குட்பட்ட பெண்களை இனங்காணும் ஆரம்பகட்ட ஆய்வு தொடர்பான தகவல் திரட்டுக்களின் பகிர்வு, எதிர்வரும் 20ஆம் திகதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு, மாவட்ட கூட்டுறவு சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

அமைச்சின் செயலாளர் சி.திருவாகரன் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில், ஆய்வு முறை அறிமுகத்தை யாழ். பல்கலைக்கழக சமுதாய மருத்துவத் துறை தலைவர் வைத்திய கலாநிதி இ.சுரேந்திரகுமாரன் நிகழ்த்த, அறிக்கையின் பகிர்வை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி ஆ.கேதீஸ்வரன் நிகழ்த்தவுள்ளார்.

இதில் பிரதம அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், சிறப்பு அதிதிகளாக ஆசியர் மன்ற பணிப்பாளர் கலாநிதி கோபகுமார் தம்பி, வடமாகாண சுகாதார அமைச்சர் மருத்துவ கலாநிதி ப.சத்தியலிங்கம் ஆகியோர் கலந்துகொள்கின்றரன்.
வடமாகாணத்தில் கிளிநொச்சி மாவட்டத்திலேயே இந்த திட்டம் முதலாவதாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

ஆசிய அபிவிருத்தி வங்கி இதற்கு நிதியுதவி வழங்கி, விசேட தேவையுடையோர் தொடர்பான தகவல்கள் ஆய்வுசெய்யப்பட்டது. இந்த ஆய்வில் திரட்டப்பட்ட தகவல்கள் மற்றும் அனுபவங்களை பகிர்வு செய்யும் நிகழ்வே 20ஆம் திகதி நடைபெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X