2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

விஜயகலாவுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தவருக்கு விசாரணைக்கு அழைப்பு

Niroshini   / 2016 ஜனவரி 27 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு அலைபேசியில் கொலை அச்சுறுத்தல் விடுத்தார் என குற்றஞ்சாட்டப்பட்ட உரும்பிராயைச் சேர்ந்த இளைஞனை,  புதன்கிழமை (27) விசாரணைக்கு வருமாறு யாழ்ப்பாணப் பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர்.

அலைபேசியில் தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக விஜயகலா மகேஸ்வரன், கடந்த 2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், குறித்த இளைஞனின் தாயாரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

திருநெல்வேலி பகுதியிலுள்ள பிரபல வர்த்தக கடையில் கடமையாற்றி வந்த குறித்த இளைஞன், வர்தத்கரின் மகளை, காதலித்து அவருடன் தலைமறைவாகியுள்ளார். இது தொடர்பில் யுவதியின் குடும்பத்தினர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், குறித்த இருவர் தொடர்பிலும் எவ்வித தகவலும் இல்லை என தெரிவித்தனர்.

இதையடுத்து, ஒரு வாரத்தின் பின்னர் கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு சென்ற விஜயகலா மகேஸ்வரன், குறித்த யுவதியை மீட்பதற்கு இன்னமும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பது தொடர்பில் கோப்பாய் பொலிஸாரை வினாவினார்.

அத்துடன், இளைஞனின் தாயாரிடம் யுவதியைகொண்டு வந்து ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கூறியுள்ளார்.

இதையடுத்தே, இளைஞனும் அவரது தாயாரும் தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக விஜயகலா மகேஸ்வரன், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

குறித்த இளைஞனின் தாய், யாழ்;ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று, விஜயகலா மகேஸ்வரனுக்கு தான் கொலை அச்சுறுத்தல் விடுக்கவில்லையெனவும் தனது மகனின் காதல் தொடர்பில் அவருக்கு விளக்கமளிக்கும் பொருட்டே அவருக்கு அலைபேசியில் அழைப்பை மேற்கொண்டதாகவும் கூறினார்.

இந்நிலையில் குறித்த இளைஞனை, இன்று விசாரணைக்கு வருமாறு பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X