2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

வீடுக்குள் நுழைந்து நள்ளிரவில் நகைக்கொள்ளை

George   / 2016 ஓகஸ்ட் 17 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், அராலி தெற்கு, வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள வீட்டுக்குள் நுழைந்த திருடர்கள், குடும்பஸ்தரை இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

புதன்கிழமை (17) அதிகாலை 1 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எம்.எஸ்.வீ. சமன்குனதில, தெரிவித்தார்.

அராலி தெற்கு வட்டுக்கோட்டை பகுதியில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் கந்தசாமி மார்க்கண்டேயர் வயது(72) என்ற முதியவரே தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் குற்றத்தடுப்பு பொலிஸார், தடயவியல் பொலிஸாரின் உதவியுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X