2025 ஜூலை 14, திங்கட்கிழமை

வெடிக்கக்கூடிய நிலையில் இருந்த குண்டு மீட்பு

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 05 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

வல்வெட்டித்துறை, ஊரிக்காடு பகுதியிலுள்ள காணியொன்றில் இருந்து 'வவா' ரக மோட்டார் குண்டொன்றை, நேற்று வெள்ளிக்கிழமை (04) விசேட அதிரப்படையினர் மீட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர். 

வீட்டு உரிமையாளர், தனது காணியை துப்பரவு செய்து கொண்டிருக்கும் போது மேற்படி குண்டு தென்பட்டுள்ளது. 

இது தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து விசேட அதிரடிப்படையினர் அங்கு வரவழைக்கப்பட்டனர்.

கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டு, 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் விமானங்களில் இருந்து வீசப்பட்ட குண்டு எனத் தெரியவந்துள்ளது.

வெடிக்க கூடிய நிலையில் காணப்பட்ட இக்குண்டு அதிசக்தி வாய்ந்தது என பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .