2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

வீட்டு சூழலை அசுத்தமாக வைத்திருந்தவர்களுக்கு அபராதம்

Niroshini   / 2016 செப்டெம்பர் 20 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

டெங்கு நுளம்பு பரவக்கூடிய வகையில் சுற்றுச்சூழலை வைத்திருந்த கட்டுவன் பகுதியைச் சேர்ந்த வீட்டு உரிமையாளர் இருவருக்கு தலா 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.யூட்சன், இன்று செவ்வாய்க்கிழமை (20) தீர்ப்பளித்தார்.

அத்துடன், வீட்டு உரிமையாளர்களை நீதவான் கடுமையாக எச்சரிக்கை செய்தார்.

தெல்லிப்பழை பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, இன்று மன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, வீட்டு உரிமையாளர்கள் இருவரும் தங்கள் குற்றங்களை ஏற்றுக்கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X