2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

விடுதியில் குழப்பம் விளைவித்தவருக்கு மறுவெறுப்புச் சிகிச்சை

George   / 2016 நவம்பர் 05 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

சாவகச்சேரி பகுதியிலுள்ள விடுதியில் தங்கியிருந்து, சக சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை, எதிர்வரும் 17 ஆம்;  திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட சாவகச்சேரி நீதவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன், சந்தேகநபரை தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்து மதுவெறுப்பு சிகிச்சைக்கு உட்படுத்த யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு கட்டளையும் பிறப்பித்தார்.

சந்தேகநபருடன் கைதான மற்றொரு நபர் மதுபோதையில் இருந்தார் என்றும், ஆனால் அவர் எந்தவித குழப்பத்திலும் ஈடுபட்டிருக்கவில்லை பொலிஸார் நீதவானின் கவனத்துக்கு தெரிவித்ததை அடுத்து அவரை 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ஆட்பிணையில் செல்ல நீதவான் அனுமதியளித்தார்.

கொழும்பில் இருந்து வருகை தந்த நபரும் சாவகச்சேரி பகுதியினை சேர்ந்த இரண்டாவது நபரும் சாவகச்சேரி பகுதியில் உள்ள விருந்தினர் விடுதியில் புதன்கிழமை (02) இரவு தங்கியுள்ளனர். இருவரும் மதுபானம் அருந்தியுள்ளனர்.

கொழும்பில் இருந்து வந்த நபர் போதை தலைக்கேறியதில், பக்கத்து அறையில் இருந்த ஏனைய வாடிக்கையாளர்களுக்கு அசௌகரியம் ஏற்படும் வகையில் நடந்து கொண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X