2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

வீடு புகுந்து வாள்வெட்டுக்கு முயற்சி: மூவர் கைது

Menaka Mookandi   / 2016 ஓகஸ்ட் 07 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், அளவெட்டி வடக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்து, வாள்வெட்டில் ஈடுபட முனைந்த மூவரை, சனிக்கிழமை (06) இரவு 11:30 மணியளவில் கைதுசெய்துள்ளதாக தெல்லிப்பழை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் எஸ்.நிதர்சன் தெரிவித்தார்.

அளவெட்டி பகுதியைச் சேர்ந்த 22, 26 மற்றும் 28 வயதுடைய இளைஞர்கள் மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து, ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் இரண்டு வாள்கள் என்பவற்றையும் பொலிஸார் கைபெற்றியுள்ளனர்.

அளவெட்டி வடக்கு பகுதியில் உள்ள இளைஞன் ஒருவருடன் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாகவும் அவரை பழிதீர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே, மேற்படி மூன்று இளைஞர்களும் வாள்வெட்டு மேற்கொள்ள முனைந்துள்ளனர்.

இதன்போது, வீதி ரோந்துக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்களை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டதில் உண்மை தெரியவந்துள்ளது.

கைதான மூவரையும், மல்லாகம் மாவட்ட நீதிமன்ற நீதிவான் ஏ.யூட்சனின் வாசஸ்தலத்தில் முற்படுத்திய போது, அவர்களை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X