2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

வெடிப்பு ஏற்பட்ட பகுதியில் வீடு கட்ட முடியாது

Niroshini   / 2016 ஜனவரி 28 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

அச்சுவேலி, நவக்கிரி பகுதியில் நிலவெடிப்பு ஏற்பட்ட பகுதியில் உடைந்த வீட்டை மீண்டும் கட்டுவது ஆபத்து எனவும் மழை காலங்களில் அந்தப் பகுதியை அவதானத்துடன் பயன்படுத்துமாறும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ்.பண்டாரா தனக்குக் கூறியதாக யாழ்.மாவட்டச் செயலாளர் நாகலிங்கன் வேதநாயகன் தெரிவித்தார்.

மேற்படி பகுதியில் சுப்பிரமணியம் தருமசேகரம் என்பவரது, 30 பரப்புத் தோட்டக்காணி மற்றும் அவரது வீடு அமைந்த 10 பரப்புக் காணியில், கடந்த 23ஆம் திகதி அதிகாலை, சுமார் 500 மீற்றர் தூரத்துக்கு நிலவெடிப்பு ஏற்பட்டது.

இது தொடர்பில் ஆராய்வதற்காக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கீழ் இருக்கும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் புதன்கிழமை (27), யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து, ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர்.
ஆராய்ச்சியின் முடிவில் மாவட்டச் செயலாளரிடம் கலந்துரையாடிவிட்டுச் சென்றனர்.

இது தொடர்பில் மாவட்டச் செயலாளர் கருத்து தெரிவிக்கையில்,

மேற்படி பகுதியில் மண் மெல்லிய படையாக இருப்பதால் நிலவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆபத்து இல்லை. ஆனால், மழை காலங்களில் அவதானமாக இருக்க வேண்டும்.

தோட்டக் காணிகளுக்கு நீர் பாய்ச்சும் போது, நீர் வெடிப்புக்களால் கீழே செல்ல வாய்ப்புள்ளதால், அதற்கு பொலித்தீன்கள் பாவிக்க வேண்டும். அந்தப் பகுதி, வீடு கட்டுவதற்கு பொருத்தமில்லை.

நிலவெடிப்பால் பாதிக்கப்பட்ட வீட்டை மீண்டும் கட்டினால் ஆபத்து ஏற்படும். மேலும், மழை காலங்களில் வெடிப்பு ஏற்பட்ட பகுதியில் செல்வதை தவிர்ப்பது நல்லது என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X