2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

வெடிபொருட்களால் மீள்குடியேற முடியாத நிலை

Gavitha   / 2016 ஏப்ரல் 24 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

'கிளிநொச்சி முகமாலை பகுதியில், வெடிபொருட்கள் அகற்றப்படாமையால் 257க்கும் அதிகமான குடும்பங்களுக்கு மீள்குடியேற முடியவில்லை' என்று மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள  முகமாலை, இத்தாவில், வேம்பொடுகேணி ஆகிய பகுதிகளில், இதுவரை வெடிபொருட்கள் அகற்றப்படவில்லை. குறித்த பகுதி அதிக வெடிபொருட்கள் காணப்படும் ஆபத்தான பகுதி என்பதால், கடந்த ஏழு ஆண்டுகளாக குறித்த பகுதியிலுள்ள வெடிபொருட்கள் அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த அகற்றும் பணிகள் நிறைவு பெறாமையால், இப்பகுதிகளில் மீள்குடியேறுவதற்கு விண்ணப்பித்துள்ள 257க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீள்குடியேற முடியாமல் உள்ளனர்.

இது குறித்து இப்பகுதியில் வெடிபொருள் அகற்றும் பணிகளை மேற்கொண்டு வரும் கலோட்ரஸ் நிறுவனத்;தினர் கருத்து தெரிவிக்கும் போது,

'அதிக யுத்தம் இடம்பெற்ற பகுதியாக காணப்படும் இப்பகுதியில், யுத்தத்தில் ஈடுபட்ட இரு தரப்புக்களும் பரஸ்பரம் வெடிபொருட்களையும் நிலக்கண்ணி வெடிகளையும் புதைத்துள்ளனர். எனவே இது அபாயகரமான பகுதியாக காணப்படுகின்றது.

இதனால் வெடிபொருட்களை அகற்றுவதில் தாமதங்கள் காணப்படுகின்றன. இப்பகுதிகளில் பணிகளை முன்னெடுக்;கும் போது உயிரிழப்புக்களும் ஏற்பட்டுள்ளன. தற்போது நவீன கருவிகள் மூலம் இதன் பணிகள்; முன்னெடுக்கப்பட்டு வருகின்றன' என்று தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X