2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

வெடிபொருளில் சிக்கி எட்டுப்பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

Kanagaraj   / 2016 ஒக்டோபர் 23 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி கிளாலிப்பகுதியில் மாடுபார்க்கச்சென்ற எட்டுப்பிள்ளைகளின் தந்தை ஒருவர் வெடிபொருளில் சிக்கி உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி கிளாலி பகுதியில் இரண்டு பேர் காணாமல் போன மாடுகளைத் தேடி சென்றபோது வெடிபொருளில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதானாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை (23) இடம்பெற்ற இச்சம்பவத்தில், அறத்திநகர் கிளாலியைச் சேர்ந்த எட்டுப்பிள்ளைகளின் தந்தையான கறுப்;பையா ராஜா என்பவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளதுடன், அதே இடத்தைச் சேர்ந்த 34 வயதுடைய பாலசுப்பிரமணியம் சுகிர்ஜன் என்ற ஒருபிள்ளையின் தந்தை படுகாயமடைந்த நிலையில் யாழ் போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை பளைப்பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X