2025 ஜூலை 16, புதன்கிழமை

விடுவிக்கப்பட்ட பகுதிகளை துப்பரவு செய்ய இராணுவம் மறுப்பு

Niroshini   / 2016 பெப்ரவரி 19 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

வலிகாமம் வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட 488.5 ஏக்கர் காணிகளில் பெக்ஹோ இயந்திரம் கொண்டு துப்பரவு பணிகளில் ஈ டுபடுவதற்கான அனுமதியை, இராணுவம்வழங்க மறுத்துள்ளதாக வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றக் குழுத்தலைவர் சண்முகலிங்கம் சஜீவன் இன்று வெள்ளிக்கிழமை (19) தெரிவித்தார்.

மேலும், மேற்படி காணிகளை உரிமையாளர்களிடம் அரசாங்கம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் வரையில் துப்பரவு செய்யும் பணியில் ஈடுபடவேண்டாம் என இராணுவம் பொதுமக்களுக்கு கூறி வருகின்றது.

இதனால், காணிகள் விடுவிக்கப்பட்டும் பொதுமக்கள் தங்கள் காணிகளை துப்பரவு செய்ய முடியாத நிலையில் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X