Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 நவம்பர் 05 , மு.ப. 07:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.ஜெகநாதன்
யாழ். வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் இருந்து கடந்த 31 ஆம் திகதி மீள்குடியேற்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட 454 ஏக்கர் காணிகளைப் பார்வையிட, வெள்ளிக்கிழமை (04) முதல், மக்கள் அனுமதிக்கப்பட்டனர்.
கடந்த 31ஆம் திகதி யாழ். மாவட்டத்துக்கு விஐயம் மேற்கொண்ட ஜனாதிபதி, வலி. வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் இருந்து 454 ஏக்கர் நிலத்தை மக்களுடைய மீள்குடியேற்றத்துக்காக யாழ். மாவட்டச் செயலாளர் நாகலிங்கன் வேதநாயகனிடம் கையளித்தார்.
இதனை தொடர்ந்து மேற்படி பகுதிகளை வெள்ளிக்கிழமை (04) முதல் பார்வையிட, படையினர் அனுமதி வழங்கினர்.
இந்நிலையில் தமது காணிகளை பார்ப்பதற்காக அப்பகுதிகளை சேர்ந்த மக்கள் பலத்த ஆவலுடன் சென்று பார்வையிட்டனர்.
குறித்த பகுதிகளில் மக்களுடைய வீடுகள் பெரும்பாலும் இடித்து அழிக்கப்பட்டுள்ளதுடன், காணிகளில் பாரிய குழிகள் உருவாகும்படி மண் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த பகுதியில் இராணுவத்தினரால் பண்ணைகள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்ட இடங்களும் இங்கு காணப்படுகின்றன.
இப் பகுதிகளை பார்வையிட்ட மக்கள் காணிகள் விடுவிக்கப்பட்டமை மகிழ்ச்சியை எற்படுத்தியிருந்தாலும், தமக்கான வீட்டுத்திட்டத்தையும் பொருளாதார உற்பத்தியையும் செய்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
வலிகாமம் வடக்கு, தையிட்டி பகுதிகள் மற்றும் காங்கேசன் துறை மத்தி, தெற்கு ஆகிய இடங்களே விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
30 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
3 hours ago
4 hours ago