2025 ஜூலை 19, சனிக்கிழமை

விடுவிக்கப்பட்ட பகுதியில் வீடுகளை காணவில்லை

George   / 2016 ஜனவரி 08 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

உயர்பாதுகாப்பு வலயமாக இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட பலாலி கிழக்கு பகுதியில் இருந்த பெரும்பாலான வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.

இப்பகுதியில் இராணுவத்தினர் பயன்படுத்திய ஒரு சில வீடுகளைத் தவிர ஏனைய வீடுகள் இவ்வாறு இடிக்கப்பட்டுள்ளன.

கடந்த  டிசெம்பர் மாதம் 29ஆம் திகதி பலாலிப் பகுதியில் விடுவிக்கப்பட்ட காணிகளில் குறிப்பாக ஜே-252, ஜே-253, ஜே-254 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் பெரும்பகுதி, மக்களுடைய விவசாய நிலங்களாகவே காணப்படுகின்றன. 

இருந்த போதும் மக்களுடைய குடியிருப்பு காணிகளும் சிறிதளவு விடுவிக்கப்பட்டிருந்தன.

ஆனாலும், அங்கிருந்து மக்களுடைய வீடுகள் ஒன்றும் தற்போது இல்லை பெரும்பாலான வீடுகள் உடைத்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினர் தமது தேவைகளுக்கான பயன்படுத்திய ஓரிரு வீடுகள் மட்டும் கூரைகள் இல்லாமல் வெறும் சுவர்களுடன் காணப்படுகின்றன.

குறிப்பாக 30 வீடுகள் இருந்த அன்டனி குடியிருப்பில் ஒரு வீட்டினைக்கூட இராணுவத்தினர் விட்டுவைக்கவில்லை. அனைத்து வீடுகளும் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டுள்ளன.

இதனால், பற்றைக்காடாக இருக்கும் அப்பகுதியில் மக்கள் தமது காணிகளை இனங்கண்டு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், பொது மக்கள் தமது பணத்தினை செலவிட்டு காணிகளை துப்புரவு செய்து வருகின்றார்கள். இதற்கான செலவினை பிரதேச செயலகம் வழங்கும் என்று உறுதியளித்த பின்பே தமது பணத்தினை செலவு செய்து பற்றைக்காடுகளை அகற்றும் நடவடிக்கையில் தாம் ஈடுபட்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X