2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

வீதிகளை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்

Niroshini   / 2016 ஜனவரி 21 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, உருத்திரபுரம் கிராமிய வீதிகளை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கிளிநொச்சி மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் புதன்கிழமை (20) தெரிவித்தார்.

கிளிநொச்சி, கரைச்சிப்பிரதேச சபைக்குட்பட்ட கிளிநொச்சி, உருத்திரபுரம் கிராமத்துக்கான வீதிகள், கடந்த ஐம்பது வருடங்களுக்கும் மேலாக புனரமைக்கப்படாமல் காணப்படுகின்றன.

இவ்வாறு குறித்த கிராமத்தின் பிரதான குறுக்கு வீதிகள், பாலங்கள், மதகுகள் என்பன சேதமடைந்து பருவமழை காலங்களில் கழிவு வாய்க்கால்கள் போன்று காட்சியளிக்கின்றன.

இதனால், பருவமழை காலங்களிலும் ஏனைய காலங்களிலும் இப்பகுதி மக்கள் வீதிகளை பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது.

எனவே, இவ்வீதியை புனரமைத்து தருமாறு, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக, மாவட்ட செயலாளரிடம் கேட்டபோது,

அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மூலம் இந்த கிராமத்தின் அனர்த்த குறைப்பு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இது தொடர்பான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவை நிறைவு பெற்றவுடன், குறித்த கிராம மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X