2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

வித்தியா கொலை: யாழ். மேல் நீதிமன்றில் குற்றப்பகிர்வுப் பத்திரம் சமர்ப்பிப்பு

Menaka Mookandi   / 2017 மே 12 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் குற்றப்பகிர்வு பத்திரம், யாழ். மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் திணைக்களத்தால் பாரப்படுத்தப்பட்டுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், குறித்த குற்றப்பகிர்வு பத்திரத்தை இரும்புப் பெட்டகத்தில் வைத்து பாதுகாக்குமாறு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கை கொழும்பில்  மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவர் முன்னிலையில் 'ட்ரயல் அட் பார்' முறையில் நடத்த சட்டமா அதிபர் திணைக்களம் தீர்மானித்துள்ளது என கடந்த வாரம் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதன்போது, குறித்த வழக்கை 'ட்ரயல் அட் பார்' முறையில் யாழ்ப்பாணத்திலேயே நடாத்த வேண்டும் என தெரிவித்து மாணவியின் இடமான புங்குடுதீவில் வியாழக்கிழமை (11) மாலை ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்நிலையில், புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் குற்றப்பகிர்வு பத்திரம் யாழ் மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் திணைக்களத்தால் பாரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாணவி 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி வன்புணர்வுக்குட்படுத்தி படுகொலை செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் 12 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, வழக்கு விசாரணைகள் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்ற நிலையில், 10ஆம் சந்தேகநபரான ஜெயவர்த்தன மற்றும் 12ஆம் சந்தேகநபரான ரவீந்திரன் ஆகிய இருவருக்கும் எதிராக சாட்சியங்கள் எவையும் இல்லாத காரணத்தால், சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்கு அமைய கடந்த மாதம் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தால் இருவரும் வழக்கிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நாளை சனிக்கிழமையுடன் (13) இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்று இரண்டு வருடங்கள் பூர்தியாகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X