2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

வித்தியாவின் தாய், ஜனாதிபதிக்கு கடிதம்

George   / 2017 மே 17 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

“புங்குடுதீவு மாணவி கொலை வழக்கை கொழும்புக்கு மாற்ற வேண்டாம். வழக்கை யாழ்ப்பாணத்தில் முன்னெடுங்கள்” என, கோரிகைவிடுத்து மாணவியின் தாய், ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “புங்குடுதீவு, 9ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சிவலோகநாதன் சரஸ்வதி ஆகிய நான், தங்களுக்கு செய்யும் தாழ்மையான விண்ணப்பமாவது, எனது மகள் வித்தியா, கொடூரமாக வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தாங்கள் அறிந்ததே.

“எனது மகளது கொலை வழக்கு,  ஊர்காவற்துறை நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது. தற்போது அவ்வழக்கின் விசாரணைகள் முடிவடைந்து, வழக்கானது மேல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்தப்படவுள்ள நிலையில், வழக்கை கொழும்புக்கு மாற்றவுள்ளதாக பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தபோது மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.

“எனது மகள் கொலை செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. ஊர்காவற்றுறை நீதிமன்ற வழக்கு நடவடிக்கைகள் எல்லாம் தமிழ் மொழியில் காணப்படுவதால் அவற்றை மொழிபெயர்ப்பதற்காக மேலும் காலதாமதம் ஏற்படும் என அஞ்சுகின்றேன்.

“எனவே, இவை அனைத்தும் எனது மகளின் இழப்புக்கு கிடைக்க வேண்டிய நீதியை இல்லாது செய்துவிடும் என நியாயமாக அஞ்சுகின்றேன். எனவே காலதாமதமின்றி, இவ்வழக்கு நடவடிக்கைகள கொழும்பில் முன்னெடுக்காது யாழ்ப்பாணத்தில் Trial At Bar  முறையில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தங்களை தாழ்மையாக கேட்டுக்கொள்ளுகின்றேன்” என, அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தின் பிரதி பிரதமர், பிரதம நீதியரசர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X