2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

வித்யா கொலை வழக்கு மாற்றம்?

George   / 2016 மார்ச் 19 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.றொசாந்த்

இன்னமும் இரண்டு மாதங்களில் புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கு யாழப்பாணம் மேல் நீதிமன்றத்துக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தால் மாற்றப்படலாம் என ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏம்.எம்.எம்.றியால் நம்பிக்கை வெளியிட்டார்.

புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கு, வெள்ளிக்கிழமை (18) ஊர்காவற்iறு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேகநபர்களுக்கு பிணை வழங்குமாறு சந்தேகநபர்கள் சார்பின் மன்றில் ஆஜராகிய சட்டத்தரணி நீதிவானிடம் கோரினார்.

இதற்குப் பதிலளித்த நீதிவான், இந்த வழக்கு இன்னும் 2 மாதங்களில் மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்படலாம் என்று நம்புகின்றேன். மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட பின்னர் நீங்கள் பிணை விண்ணப்பத்தைக் கோரலாம் என்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X