2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

வீதியை நிரந்தரமாக புனரமைக்கவும்

Gavitha   / 2016 நவம்பர் 07 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு கரைதுறைபற்றின் இரட்டைவாய்க்காலில் இருந்து வலைஞர்மடம், அம்பலவன்பொக்கணை, மாத்தளன், சாலைவரையான வீதியினை நிரந்தரமாக புனரமைக்குமாறு மேற்படி கிராமங்களின் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குறித்த வீதி, குன்றும் குழியுமாக இருக்கின்றமையால், இந்தக் கிராமங்களுக்கு பஸ் சேவைகள் இடம்பெறுவதில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்காலிக புனரமைப்புகள், பஸ் சேவைகளை நடாத்துவதற்கு உகந்ததல்ல. போர் காலத்தில் இக்கிராமங்கள் பெரும் அழிவுகளைக் கண்டு, தற்போது மீண்டுவரும் நிலையில், மீள்குடியேற்றத்தின் பின்னர் பிரதான வீதி புனரமைக்கப்படாமலுள்ளது.

இதன் காரணமாகவே போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் முல்லைத்தீவு நகரத்துக்கும் புதுக்குடியிருப்பு உபநகரத்துக்கும் போக்குவரத்து செய்வதில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாகவும் தங்களுடைய கிராமங்கள் தொடர்பாக மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் அக்கறை காட்டுவதில்லையெனவும் தெரிவித்தனர்.

வடமாகாண முதலமைச்சருக்கு இது தொடர்பாக மனுக்கள் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால், வீதி உட்பட போக்குவரத்து, சுகாதாரம் போன்றவற்றில் தமது கிராமம் அவலங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் தமது கிராமங்களை முன்னேற்றுவதற்கான திட்டங்களை வரைந்து நடைமுறைப்படுத்துமாறும் இக்கிராமங்களின் மக்களினால் தெரிவிக்கப்படுகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X