2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

வேப்பமரக்குற்றிகளை கடத்தியவர் கைது

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 21 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

கல்வியங்காடு பகுதியிலிருந்து உரும்பிராய் பகுதிக்கு சிறிய ரக மோட்டார் வாகனத்தில் வேப்பமரக் குற்றிகளை கடத்திய குற்றச்சாட்டின் பேரில் ஒருவரை புதன்கிழமை (20) இரவு கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இராசவீதி கோண்டாவில் பகுதியில் வீதி ரோந்துக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், குறித்த வாகனத்தை வழிமறித்துச் சோதனையிட்டனர். இதன்போது, அனுமதிப்பத்திரமின்றி வேப்பமரகக் குற்றிகளை கடத்திவந்தமை தெரியவந்துள்ளது.

வேப்பமரக் குற்றிகளுடன் வாகனத்தை  பொலிஸ் நிலையத்துக்கு பொலிஸார் கொண்டு சென்றுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X