2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

விபத்தில் குடும்பஸ்தர் பலி

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 07 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் கோப்பாய் பகுதியில் நேற்று புதன்கிழமை (06) மாலை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியதுடன், மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

கோப்பாயைச் சேர்ந்த சுப்பிரமணியம் ஜெயபாலன் (வயது 48) என்பவர் உயிரிழந்ததுடன், அவரது சகோதரர் சுப்பிரமணியம் இந்திரபாலன் (வயது 50), ஜெயபாலன் பாவனா (வயது 11) மற்றும் எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த செல்வராசா கிரிசாந் (வயது 23) ஆகியோர் படுகாயமடைந்தனர்.

மூன்று பேர் பயணித்த மோட்டார் சைக்கிள் பிரதான வீதியில் இருந்து சிறுவீதிக்குச் செல்வதற்கு சமிக்ஞை காட்டித் திரும்பியவேளை, பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இளைஞன், வேகக்கட்டுப்பாட்டை இழந்து திரும்ப முற்பட்ட மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளார்.

படுகாயமடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, அங்கு மேற்படி குடும்பஸ்தர் உயிரிழந்தார். 

மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X